2 லட்சம் வாழை மரங்களை அழித்த சூறைக்காற்று..கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்..!

share on:
Classic

செங்கம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் சூறைக்காற்றால் 2 லட்சம் வாழை மரங்கள் சேதம் ஏற்பட்டதால், பயிர் காப்பீட்டு தொகையினை உடனே வழங்க விவசாயிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

செங்கம் ஜவ்வாது மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள, கொட்டாவூர், குப்பனத்தம், கிளையூர், ஊர்கவுண்டனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை மழை பெய்தது. இதனால் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.  

மேலும் சாய்ந்த மரங்களை அகற்ற 5000 முதல் 10,000 ரூபாய் வரை செலவாகும், என்பதால் கூட்டுறவு வங்கிகளில் உள்ள பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind