அசாம், பீகாரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 55 பேர் உயிரிழப்பு

share on:
Classic

அசாம் மற்றும் பீஹார் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, உயிரிழந்தோர் எண்ணிக்கை 55-ஆக அதிகரித்துள்ளது.

அசாம், பீஹார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சாலை மற்றும் ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. அசாம் மாநிலத்தில், 33 மாவட்டங்கள் வெள்ள நீரில் சிக்கித் தவிக்கின்றன. 

இதனால், 45 லட்சம் பேர், பாதிக்கப்பட்டுள்ளனர். பீஹார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் 26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாம் மற்றும் பீஹார் மாநிலங்களில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 14 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கேரள மாநிலத்தில், கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று காஸிரங்கா பூங்காவில் 90 சதவீதம் அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்ததால், அதிகாரிகள் முழுவீச்சில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind