பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு கூடுதல் கட்டணம்?

share on:
Classic

மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் ஓடும் 22 தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு செய்ய குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில்  விசாரணைக்கு வந்தபோது, சர்க்கார் திரைப்படத்துக்கு வசூலித்தது போல், ரஜினி நடித்த பேட்ட, அஜித்குமார் நடித்த விசுவாசம் படத்துக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் பேட்ட, விசுவாசம் திரைப்படம் ஓடும் 22 தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு தியேட்டருக்கு 3 பேர் வீதம் வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள், வழக்கறிஞர்கள் ஆணையர்கள் கொண்ட குழு அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இந்தக்குழு மதுரை மாவட்டத்தில் பேட்ட, விசுவாசம் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் ஆய்வு நடத்தி, வரும் 18 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

 

News Counter: 
100
Loading...

aravind