கணக்கில் வராத 2,50,000 ரூ. பணம் பறிமுதல்..சார் பதிவாளரிடம் விசாரணை

share on:
Classic

வாலாஜா சுங்கச்சாவடியில் சார் பதிவாளர் காரில் இருந்து 2,50,000 ரூபாய் கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில், காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சார் பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கணக்கில் வராத பணம் உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. சரவணகுமார் தலைமையிலான குழு மணிகண்டனிடம் ஆய்வு செய்ய அலுவலகத்துக்கு சென்றனர். 

அப்போது, அவர் பள்ளிகொண்டாவில் இருந்து காஞ்சிபுரத்துக்கு காரில் புறப்பட்டுச் செல்வதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரை பின் தொடர்ந்து சென்ற லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சார் பதிவாளர் மணிகண்டன் காரை வாலாஜா சுங்கச்சாவடியில் மடக்கிப்பிடித்தனர். அவருடைய காரில் இருந்த கணக்கில் வராத சுமார் 2,50,000  ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev