’ஒளடதம்’ படம் மே 24 ந் தேதி வெளியாகும் என தகவல்..!!

share on:
Classic

ஒளடதம் படம் வரும் மே 24 ந் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான நேதாஜி பிரபு தெரிவித்துள்ளார்

ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் சார்பாக நேதாஜி பிரபு தயாரித்து, ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘ஒளடதம்’. வெளிநாடுகளில் காலாவதியான மூலப்பொருட்களைக் கொண்டு மருந்து மாத்திரைகளைத் தயாரித்து இந்தியாவில் விற்கும் மோசடிகளைத் தோலுரித்துக் காட்டும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரமணி இயக்கியிருக்கிறார்.

நான்கு மாதங்களுக்கு முன்பே சென்சார் செய்யப்பட்டு வெளியிடத் தயாராக இருந்த போது, இந்தப் படத்துக்கு சில சிக்கல்கள் ஏற்பட்டது. தற்போது அந்த சிக்கல்கள் தீர்ந்து படம் வெளிவரத் தயாராகிவிட்டது. இதையடுத்து ‘ஒளடதம்’ திரைப்படம் வரும் மே 24 ந் தேதி வெளிவருகிறது. இந்த தகவலை ‘ஒளடதம்’ படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான நேதாஜி பிரபு தெரிவித்தார்.    

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan