ப.சிதம்பரம் கோழைகளால் வேட்டையாடப்படுகிறார் - பிரியங்கா காந்தி

share on:
Classic

உண்மையை பேசியதற்காக ப. சிதம்பரம் வேட்டையாடப்படுவதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “ மிகவும் தகுதியான, மரியாதைக்குரிய மாநிலங்களவை உறுப்பிரான ப.சிதம்பரம், உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சராக பல ஆண்டுகளாக நாட்டிற்கு சேவை செய்து வருகிறார். இந்த அரசின் தோல்விகளை அவர் தயக்கமில்லாமல் அம்பலப்படுத்தினார். ஆனால் இந்த உண்மைக கோழைகளுக்கு சிரமமாக உள்ளது. அதனால் அவரை கோழைத்தனமாக வேட்டையாடுகின்றனர். ஆனால் இந்த நேரத்தில் நாங்கள் சிதம்பரத்திற்கு துணை நிற்போம், உண்மைக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி எங்களுக்கு கவலையில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதனிடையே டெல்லியில் உள்ள சிதம்பரத்தை தேடி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்றனர். அவர் அங்கு இல்லாததால் இரண்டு மணி நேரத்தில் அவர் ஆஜராகும் படி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது. 

News Counter: 
100
Loading...

Ramya