மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி ரபேல் விமானத்தின் விலை 41.42% உயர்ந்தது ஏன்?

share on:
Classic

ரபேல் போர் விமானத்தில் விலை 41 புள்ளி 42 சதவீதம் அதிகரித்தது ஏன் என மத்திய அரசுக்கு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ரபேல் விவகாரம் தொடர்பாக ஆங்கில் நாளேட்டில் சமீபத்தில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டினார். அப்போது விமானப்படைக்கு தேவையான 126 விமானங்களுக்குப் பதிலாக 36 போர் விமானங்களை வாங்கியதால் அவற்றின் விலை 41 புள்ளி 42 சதவீதம் அதிகரித்ததாக குறிப்பிட்டார். மேலும், விமானப்படைக்கு தேவையான 126 விமானங்களை வாங்காமல், வெறும் 36 விமானங்களை மட்டும் வாங்கியதன் மூலம் இந்த அரசு நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டதாகவும் குற்றம்சாட்டினார். 

News Counter: 
100
Loading...

mayakumar