"கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற பாஜக கண்டுபிடித்த உத்தி" சிதம்பரம் கடும் விமர்சனம்

share on:
Classic

பணமதிப்பு நீக்கம் என்பது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற பாஜக கண்டுபிடித்த உத்தி என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதுகுறித்து தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் கருப்பு பண ஒழிப்பில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என கூறியதாக ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது. 

இதனை சுட்டிக்காட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பணமதிப்பு நீக்கம் என்பது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு பாஜக கண்டுபிடித்த உத்தி என்றும், ரிசர்வ் வங்கி அறிவுரையையும் மீறி அரசு எடுத்த முரட்டுத்தனமான முடிவு என்றும் விமர்சித்துள்ளார். மேலும் இந்த நடவடிக்கையால் எத்தனை சிறு தொழில்கள் நசிந்தன, எத்தனை பேர் வேலை இழந்தார்கள் என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

sajeev