நேற்று மாலை பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவம்

Classic

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தில், பத்மாவதி தாயார் தங்கரதத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் ஆறாவது நாளான நேற்று மாலை தங்கரதத்தில் பத்மாவதி தாயார் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் மாட வீதிகளில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பக்தி கீர்த்தனைகள் பாடியும், கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடி பக்தர்களே மகிழ்வித்தனர்.

News Counter: 
100
Loading...

youtube