பாக் வான்வளி, சாலை வழிகளை முழுமையாக மூட திட்டம் - பாக் அமைச்சர்..!!

share on:
Classic

காஷ்மீர் பிரச்சனையை தொடர்ந்து இந்திய விமானங்கள் செல்லாத வகையில் வான்வழிகளை மூடுவதற்கு பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை அண்மையில் மத்திய அரசு ரத்து செய்தது.  அரசியலமைப்பு 370 பிரிவையும் திரும்பபெற்றது. மேலும் ஜம்மூ காஷ்மீர் மற்றும் லடாக்கை தனி யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால் வர்த்தக உறவை முறித்துக் கொண்ட பாகிஸ்தான், பஸ், ரயில் என அனைத்து சேவைகளையும் நிறுத்திக் கொண்டது. இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லையில் இந்திய ரானுவத்தை அதிகளவில் குவித்துள்ளது இந்தியா. 

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பவாத் சவுத்ரி கூறுகையில் இந்திய விமானங்கள் செல்லாத வகையில் பாகிஸ்தானின் அனைத்து வான்வழிகளையும் முழுமையாக மூட ஆலோசிக்கப்பட்டது. அதேபோல் பாகிஸ்தான் சாலை வழியாக இந்தியாவுக்குள் ஆப்கானிஸ்தான் வர்த்தகம் செய்வதையும் முழுமையாக தடை செய்யவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan