அபிநந்தனை சிறைபிடித்த நாளை கொண்டாட பாக். திட்டம்..!

share on:
Classic

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை சிறைப்பிடித்த நாளை ஆண்டுதோறும் கொண்டாட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த, பிப்ரவரி 14-ஆம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பினர் புல்வாமா பகுதியில் தற்கொலை படை தாக்குதல் நடத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிப்ரவரி 26-ஆம் தேதி இந்திய விமான படை வீரர்கள், பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் எதிர்பாராதவிதமாக இந்திய வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் விமான படையினரிடம் சிக்கி கொண்டார். இதனைதொடர்ந்து, பிப்ரவரி 27-ஆம் தேதி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், இந்திய வீரர் அபிநந்தனை சிறைபிடித்த நாளை ஆண்டுதோறும் ஆப்பரேஷன் ஸ்விப்ட் ரிடார்ட் என்ற பெயரில் கொண்டாட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News Counter: 
100
Loading...

Ragavan