பாகிஸ்தானில் இந்திய டிவி சேனல்களுக்கு தடை நீட்டிப்பு! வி.கே.சிங் பதிலடி

share on:
Classic

பாகிஸ்தானில் இந்திய டிவி சேனல் தடையால், இந்திய பாகிஸ்தான் மக்கள் தொடர்பை துண்டிக்க முடியாது என இணை அமைச்சர் வி.கே.சிங் தடாலடியாக கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் இந்திய டிவி சேனல்கள் அனைத்திற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கும் என்று பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, பாகிஸ்தான் மக்கள் இந்திய சேனல்களை பார்ப்பதை தொடர வேண்டும் என்றும், டிவி சேனல் தடை இரு நாட்டு மக்களின் தொடர்பை துண்டிக்காது எனவும் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தலைமை நீதிபதி சாகிப் நிசார், “இந்திய நாட்டின் தொடர்பான தகவல்களை பாகிஸ்தான் சேனல்களில் ஒளிபரப்பு செய்ய நாங்கள் அனுமதிக்கமாட்டோம், ஏனெனில் அது நம் கலாச்சாரத்தை அழித்து விடும்” என்றார்.

இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங், “பாகிஸ்தான் நீதிபதி சொல்வதால் மக்கள் டிவி பார்ப்பதை நிறுத்தி விடுவார்களா?” என கேள்வி எழுப்பினார். மேலும் ஒரு தனி நபர் சொல்வதால் மக்கள் தங்களுக்குள் உள்ள தொடர்பை துண்டிக்கமாட்டார்கள் என்று தெரிவித்தார்.

65-80% வெளிநாடுகளின் பொழுதுபோக்கு அம்சங்களை பாகிஸ்தானில் ஒளிபரப்புவதாக பாகிஸ்தான் மிண்ணனு ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவர், பாகிஸ்தான் நீதித்துறையினரிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

aravind