”ஒன்றரை மாதங்களில் 513 முறை பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்”

share on:
Classic

பாலகோட் தாக்குதலை தொடர்ந்து, காஷ்மீர் எல்லையில் 513 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

புல்வாமாவில் துணை ராணுவத்தினர் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி குண்டுவீசி தாக்குதல் தொடுத்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரித்து இருப்பதாக லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாலாகோட் தாக்குதலுக்கு பிறகான கடந்த ஒன்றரை மாத காலத்தில் மட்டும் எல்லையில் ஏறக்குறைய 513 அத்துமீறிய தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் அரங்கேற்றியுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த தாக்குதலில், இந்திய தரப்பில் 4 வீரர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 45 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறினார்.

News Counter: 
100
Loading...

Ragavan