உலகக்கோப்பை : நியூசிலாந்தை சுழற்றி அடித்த பாகிஸ்தான்..!

share on:
Classic

நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையேயான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி..!

நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையே எட்க்பாஸ்டன் மைதானத்தில் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய மார்ட்டின் குப்டில் 5 ரன்னிலும், கொலின் மன்ரோ 12 ரன்னிலும் வெளியேறி அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.
அடுத்து வந்த கேன் வில்லியம்சன் நிதானமாக ஆடி 41 ரன்னில் வெளியேறினார். பின்னர் வந்த ஜேம்ஸ் நீஷம் மற்றும் கொலின் டி கிராண்ட்ஹோம் இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர். கொலின் டி கிராண்ட்ஹோம் 64 ரன்களில் ரன் அவுடில் வெளியேற, ஜேம்ஸ் நீஷம் ஆட்டத்தின் இறுதி வரை நிலைத்து ஆடி 97 ரன்கள் சேர்த்தார். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் சேர்த்து தந்து இன்னிங்ஸை நிறைவு செய்தது. 
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷாஹீன் அஃப்ரிடி 10 ஓவர்கள் வீசி 3 ஓவர்கல் மெய்டன் செய்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி நியூசிலாந்து அணியை கட்டுக்குள் கொண்டு வந்தார்..

238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய இமாம்-உல்-ஹக் 19 ரன்னிலும் ஃபக்கர் ஜமான் 9 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் வந்த பாபர் ஆசாம் இறுதி வரை நிலைத்து ஆடி அணிக்கு வெற்றி பெற்று தந்தார். அணியில் அதிகபட்சமாக பாபர் ஆசாம்  101 ரன்களும், ஹரிஸ் சோஹைல் 68 ரன்களும் சேர்த்தனர்.   

 

News Counter: 
100
Loading...

Saravanan