பிரதமர் மோடியின் விமானத்துக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி..!

share on:
Classic

கிர்கிஸ்தான் செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் விமானத்துக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து, இந்திய பயணிகள் விமானங்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. இந்தநிலையில், வரும் 13,14 ஆகிய தேதிகளில், கிர்கிஸ்தானில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இவரது விமானத்துக்கு அனுமதி வழங்க இந்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

Ragavan