ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆதரவு

share on:
Classic

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், தற்காலிக உறுப்பினர் இடத்துக்கான தேர்தலில் இந்தியாவுக்கு, பாகிஸ்தான் உள்ளிட்ட 55 நாடுகள் ஆதரவளித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களாக இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் உள்ளன. 2021 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அல்லாத  5 இடங்களுக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறுகிறது. இதில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக இடத்துக்கான இந்தியாவின் வேட்புமனுவை ஆப்கானிஸ்தான், பூடான், இந்தோனேசியா, ஈரான், ஜப்பான், குவைத், மலேசியா, மாலத் தீவு, மியான்மர், உள்ளிட்ட 55 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது பாகிஸ்தானும் திடீரென ஆதரவு தெரிவித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind