விடுவிக்கப்படுவாரா அபிநந்தன்...? இன்னும் சில நிமிடங்களில் பாக்.அமைச்சரவை கூட்டம்

share on:
Classic

"இந்திய விமானி அபிநந்தன் விடுதலை செய்யப்படுவாரா?” என்ற மிகப்பெரிய வினாவிற்கு விடை கிடைக்கும் விதமாக பாகிஸ்தான் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 

புல்வாமா தாக்குதல் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இரு நாட்டு எல்லையை கடக்கும் முயற்சியில் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட வண்ணமிருந்ததால் அசாதாரண நிலை உச்சம் பெற்றது. மேலும், இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டிருப்பது பதற்றத்தை இன்னும் அதிகரித்தது. 

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள இக்கூட்டத்தில் பாகிஸ்தான் அமைச்சர்கள், இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர். 

இதில், அபிநந்தனை விடுதலை செய்வது, இந்தியாவுடனான பிரச்னையை சுமூகமாக தீர்ப்பது உட்பட 12 முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. 

News Counter: 
100
Loading...

mayakumar