அரசின் கட்டுப்பாட்டில் 182 மதப்பள்ளிகள் - பாக். தகவல்

share on:
Classic

பாகிஸ்தானில் 182 மதப்பள்ளிகளை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த கொடூரத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனையடுத்து, பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகள், நாளுக்கு நாள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. 

இந்நிலையில், 182 மதப்பள்ளிகளை பல மாகாண அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டில்  கொண்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 121 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

News Counter: 
100
Loading...

sajeev