ஜெயிஷ் இ- ஐ பயன்படுத்தி இந்தியாவில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் - பர்வேஸ் முஷரஃப்

share on:
Classic

பாகிஸ்தானின் உளவு அமைப்பு ஜெயிஷ் இ அமைப்பின் உதவியுடன் இந்தியாவில் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப் தெரிவித்துள்ளார்.

தனது பதவிக்காலத்தில் ஜெயிஷ் இ முகமது அமைப்பின் உதவியுடன் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இந்தியாவில் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் செய்தியாளர் நதிம் மாலிக் என்பவருக்கு அளித்த தொலைபேசி உரையாடலின் போது அவர் இதனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஜெயிஷ் இ அமைப்புக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்றுள்ள அவர், அந்த அமைப்பு கடந்த 2003-ம் ஆண்டு தன்னை 2 முறை கொல்ல முயன்றதாகவும் தெரிவித்தார். முஷரபின் பதவிக்காலத்தில் ஏன் ஜெயிஷ் இ அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்று கேள்வி கேட்டபோது, அப்போதைய காலக்கட்டம் வித்தியாசமாக இருந்ததால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் கூறினார். 

 

 

News Counter: 
100
Loading...

Ramya