பாகிஸ்தான் கையில் கறுப்பு நிற பேட்ச்.. காரணம் இதுதான்..!

share on:
Classic

இன்று ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி கருப்பு பேட்ச் அணிந்து விளையாடினர். அதற்கான காரணத்தை அணி கேப்டன் சர்ப்ராஸ் அஹமது இப்போது பகிர்ந்துள்ளார். 

இன்றைய 17-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, களமிறங்கிய ஆஸ்திரேலியா 49 ஓவர் முடிவில் 307 ரன்கள் எடுத்து தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தானுக்கு 308 என்ற கடின இலக்கை நிர்ணயித்தது. பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினாலும்  ரன் ரேட்டை குறைக்க தவறிவிட்டனர். இதனையடுத்து 308 ரன்களை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடி வருகின்றனர். அதற்கான காரணத்தை அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அஹமது வருத்ததுடன் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “ எங்கள் நாட்டின் நடுவர் ரியாசுதீன் மறைவை அடுத்து இந்த கருப்பு பேட்சை அணிந்து விளையாடுகிறோம்” என வருத்தத்துடன் தெரிவித்தார். ஆட்டம் தொடங்குவதற்க்கு முன் நடுவர் ரியாசுதீன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

  

News Counter: 
100
Loading...

Saravanan