வாக்குத்தவறிய பாகிஸ்தான்... இந்திய வீரர் வீர மரணம்

share on:
Classic

சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் வீர மரணமடைந்துள்ளார். 

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினருக்கும், பாகிஸ்தான் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இந்த மோதல் சில நேரங்களில் எல்லை தாண்டி நடைபெறவும் தவறுவதில்லை. இந்நிலையில், காஷ்மீரில் உள்ள மிக்சில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணமடைந்துள்ளார். 'பதற்றத்தை தணிப்பதற்கு அமைதி ஒன்றே வழி' என பாகிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்திய அரசு  சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஆனால், ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவத்தினர் தற்போது முன்னெடுத்துள்ள இந்த அத்துமீறிய தாக்குதலால் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் புதிய விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

News Counter: 
100
Loading...

mayakumar