பாகிஸ்தானின் நடவடிக்கைகள் இரட்டை முகத்துடன் உள்ளன : அமெரிக்கா கருத்து

share on:
Classic

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதிகளுக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் இரட்டை முகத்துடன் உள்ளதாக என அமெரிக்க தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக பேசிய அமெரிக்க பாதுகாப்பு துறையின் மூத்த அதிகாரி ஆலீஸ் ஜி. வெல்ஸ் “ பிப்ரவரியில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே உச்சபட்ச பதற்றம் காணப்பட்டது. லஷ்கர் இ தொய்பா மற்று ஜெயிஷ் இ முகமது ஆகிய அமைப்புகள் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றன. எனவே பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். நீண்டகால நிலைப்புத்தன்மைக்கும், இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கும் தேவையான சில முக்கிய நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தலைவர்களிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். 

கடந்த சில மாதங்களாக தீவிரவாத அமைப்பின் சொத்துக்களை முடக்குதல் போன்ற நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. இவை முக்கியமானாதாக இருந்தாலும், தற்போது வரைக்கும் இரட்டை  முகத்துடன் அந்நாடு செயல்படுகிறது. ஆனால் தீவிரவாதிகளுக்கு எதிரான அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, அந்த அமைப்பின் தலைவர்கள் மீது பாகிஸ்தான் வழக்கு தொடர வேண்டும்” என்று தெரிவித்தார். 

News Counter: 
100
Loading...

Ramya