அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்..!

share on:
Classic

விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம் வீர் சக்ரா விருதை வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பாகிஸ்தான் ராணுவ விமானங்கள், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததை இந்திய விமானப்படை சிறப்பாக செயல்பட்டு முறியடித்தனர். அந்த பணியில் ஈடுபட்டிருந்த அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்தாலும், ராஜாங்க ரீதியில் அழுத்தம் கொடுத்து மத்திய அரசு அவரை மீட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் பிடியில் மிகமோசமான சூழ்நிலையில் இருந்தபோதும் அபிநந்தன் வர்தமான், கம்பீரத்துடன் இருந்தது மக்களின் மனங்களை வென்றது. இதற்காக இந்திய ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம் வீர் சக்ரா விருதை அபிநந்தன் வர்தமானுக்கு வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

sajeev