பழனி : பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்...

share on:
Classic

பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானைக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றன. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி 20-ஆம் தேதி இரவு நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சி 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்க்கான ஏற்படுகளை பழனி கோயில் ஊழியர்கள் மேற்க்கொண்டுவருகின்றனர்.

News Counter: 
100
Loading...

Ragavan