கொடநாடு வீடியோவும்...முதலமைச்சரின் மறுப்பும்...

share on:
Classic

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை குறித்து தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளவை உண்மை இல்லை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவறான செய்தியை வெளியிட்டவர்கள் மற்றும் அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ததாக அதிமுக மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறிவருவதாகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யாதவர் என்றும் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind