ரவிசங்கர் பிரசாத்திற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் பழனிசாமி கடிதம்..!

share on:
Classic

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மற்றும் மாநில மொழிகளில் வெளியிட வழிவகை செய்ததற்கு நன்றி தெரிவித்து, மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில், மாநில மொழிகளில் தீர்ப்புகள் என்ற இணைப்பில் தமிழும் இடம் பெற்று உள்ளது. இந்நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மற்றும் மாநில மொழிகளில் வெளியிட வழிவகை செய்ததற்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

தீர்ப்புகளை தமிழில் வெளியிடுவதன் மூலம் அவற்றை தமிழக மக்கள் எளிதில் அறிய முடியும் என தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளையும் தமிழில் வெளியிட ஆவண செய்ய வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind