மேகதாது அணை விவகாரம் : பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் பழனிசாமி

share on:
Classic

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டும் முடிவு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என தெரிவித்துள்ளார். எனவே, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட மத்திய அரசு, சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 

மேலும், தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தரக் கூடாது என்றும், தமிழகம் உட்பட காவிரி ஆறு பாயும் மாநிலங்களின் கருத்துகளை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind