தூத்துக்குடி, சேலத்தில் குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டம்..!

share on:
Classic

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகருக்குள் வெற்றிக்களிப்புடன் நுழைந்த நாளை நினைவுகூரும் வகையில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்திற்கான தவகால வழிபாடு கடந்த மாதம் 6ஆம் தேதி துவங்கியது. குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில், சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதி வழியாக பவணியாக சென்றனர்.

இதே போல், சேலம் மாவட்டம் எடப்பாடியில் புனித செல்வ நாயகி அன்னை ஆலயத்தில் குறுத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, நடைப்பெற்ற பவணியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கரங்களில் குருத்தோலையை ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்றனர். மேலும், தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியிலும் பங்கேற்று பிரார்த்தனை நடத்தினர்.

News Counter: 
100
Loading...

Ragavan