சூர்யாவுக்காக புதிய கதையை தயார் செய்யும் பாண்டிராஜ்..!!

share on:
Classic

சூர்யாவிற்காக குடும்ப சென்டிமண்ட்டுடன் கதை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து பாண்டிராஜ் - சூர்யா கூட்டணி விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் சூர்யா.  இவர் செல்வராகவன் இயக்கத்தில்  நடித்த ‘என்.ஜி.கே.’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. என்.ஜி.கே படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்தில் நடித்திருக்கும் சூர்யா இப்போது இறுதிச் சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்திலும் சூரரைப் போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுமட்டுமில்லாம இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ரொம்ப நாட்களாகவே ஒரு கிராமத்து படத்தில் நடிக்க வேண்டும் என்று சூர்யா முடிவு செய்துள்ளார். 

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த சூர்யா இதற்காக தனது கால்ஷீட்டை அந்தப் படத்திற்காக ஒதுக்கி வைத்திருந்தார். ஆனால், திடீரென்று இயக்குனர் பாண்டிராஜ் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்ததை தொடர்ந்து  இயக்குனர் பாண்டிராஜின் இந்த செயலைக் கண்டு நடிகர் சூர்யா அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

தற்போது சூர்யாவிற்காக குடும்ப சென்டிமண்ட்டுடன் கதை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் பாண்டிராஜ் - சூர்யா கூட்டணி விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan