”ஜெயலலிதா கண்ட கனவுகளை நனவாக்கி வருகிறார்” விஜயபாஸ்கருக்கு பன்னீர்செல்வம் பாராட்டு..!

share on:
Classic

ஜெயலலிதா கண்ட கனவை அமைச்சர் விஜயபாஸ்கர் நனவாக்கி வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெர்வித்துள்ளார்.

சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். உயர் சிறப்பு தனியார் மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சுகாதார துறையில் முதலமைச்சர் ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்கும் வகையில் அமைச்சர் சுகாதர துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாக கூறினார். மேலும் பேசிய அவர், நிதி அயோக் வெளியிட்ட அறிக்கையில் தமிழகம் இந்தியாவில் சுகாதார துறையில் 3ஆம் இடம் பிடித்துள்ளது. மேலும் இன்று தொடங்கப்படும் இந்த மருத்துவமனை அனைத்து வகை மருத்துவங்களின் பயன்களையும் மக்களுக்கு வழங்கும் ஆலயமாகத் திகழ வாழ்த்துகளை தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind