குழந்தைகளை பயன்படுத்தி உணவை பெறும் பெற்றோர்கள்...!

share on:
Classic

கடாரியா சமூகத்தை சேர்ந்தவர்கள் தனது குழந்தைகளை பயன்படுத்தி உணவு பெறும் அதிர்ச்சிகுரிய தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்த பன்ஸ்வாராவில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனது குழந்தைகளை பயன்படுத்தி, 1500 லிருந்து 2000 வரை சம்பாத்திது வருகின்றனர். காடாரியா சமூகத்தை சேர்ந்த இவர்கள் உணவுக்காக தனது குழந்தைகளையே அடமானம் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் 6 வாரங்களில் இது குறித்த தகவல்களை அனுப்பும் படி ராஜஸ்தான் அரசுக்கு என்.எச்.ஆர்.சி, நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்கள் அளித்த இந்த தகவல் உண்மையெனில், குழந்தைகளுக்கு தேவையான கல்வி மற்றும் பிற தேவைகளையும் தீர்ப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என்பது தெரியவந்துள்ளது.  

News Counter: 
100
Loading...

Vijayshanthi