ஃபிரான்ஸ் வெடி விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் பலி...!

share on:
Classic

ஃபிரான்ஸில் நடந்த வெடி விபத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

தலைநகர் பாரிஸில் உள்ள பேக்கரியில் வாயு கசிவு ஏற்பட்டது. குறிப்பிட்ட அந்த கட்டிடத்தின் நுழைவு வாயிலை திறக்க முடியாமல் அக்கம்பக்கத்தினர் திணறிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென வெடித்துச் சிதறியது. இந்த விபத்தை சற்றும் எதிர்பார்க்காத அக்கம்பக்கத்தினர் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில், 14 பேர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அவசரகால பணியை முன்னெடுத்தனர். அப்போது 2 தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இச்சம்பவம் தீவிரவாதிகளின் சதிச்செயலாக இருக்க வாய்ப்பிருப்பதாக ஃபிரான்ஸ் அரசு முன்னர் அச்சம் தெரிவித்திருந்தது. ஆனால் தீவிரவாத குழுக்களுக்கும் தற்போதைய வெடி விபத்திற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என அந்நாட்டு உள்துறை அமைச்சர் இப்போது தெரிவித்துள்ளார். 

News Counter: 
100
Loading...

mayakumar