பாகிஸ்தான் ரயில் விபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்வு..

share on:
Classic

பாகிஸ்தானில் சரக்கு ரயிலும், பாசஞ்சர் ரயிலும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழ்ந்தோர் என்ணிக்கை 23-ஐ தாண்டியுள்ளது. 

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ரஹீம் யர் கான் மாவட்டத்தில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. லாகூரின் கிழக்குப் பகுதியில் இருந்து வந்த பயணிகள் ரயில் அங்கு கிராஸிங்கில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இந்த ரயில் விபத்தில் இரண்டு ரயில்களின் பாகங்களும் சிதறி விழுந்தன. கிரேன்கள் மூலம் பயணிகள் மீட்கப்பட்டனர். இதுகுறித்து பேசிய அந்நாட்டின் ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர், தங்களுக்கு கிடைத்த அண்மை தகவல்களின் அடிப்படையில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் காயமடைந்த சுமார் 75 பேரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே ரயில்வே உட்கட்டமைப்பு வசதிகள் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட நிலையை மாற்ற, தேவையான உடனடி நடவடிக்கைகளை ரயில்வே அமைச்சர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் முதலீடுகளின் பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தான் ரயில்வே தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், அங்கு ரயில் விபத்துகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ramya