இத்தனை நாட்களாக இப்படிப்பட்ட மனிதரையா கிண்டலடித்து கொண்டிருந்தோம்..

share on:
Classic

தனது மகன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவத்தை உருக்கமாக தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜு, இனிமேல் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

தெர்மாகோல் புகழ் :

அமைச்சர் செல்லூர் ராஜு என்றாலே நம் நினைவிற்கு வருவது தெர்மாகோல் திட்டம் தான். வைகை ஆற்றின் நீர் ஆவியாகாமல் தடுப்பதற்காக நீர்தேக்கங்களில் தெர்மாகோல் அட்டைகளை மிதக்கவிடும் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார். அவரின் இந்த முயற்சிக்கு பல தரப்பினரும் கடும் விமர்சனங்களை தெரிவித்த நிலையில், சமூக வலைதளங்களில் அவரது திட்டத்தை கிண்டலடித்து ஏராளமான மீம்ஸ்களும் வைரலாக ஆரம்பித்தன. 

 

தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியவர் :

’ரஜினிகாந்த் நதிநீர் இணைப்பை பற்றி பேசி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முயல்கிறாரா?’ என கடந்த 2018-ஆம் ஆண்டு செல்லூர் ராஜுவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு “காரைக்குடி ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாமே தவிர தமிழக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் அது மக்கள் கையில் தான் இருக்கிறது” என்று தெரிவித்தார். அதற்கு காரைக்குடி நகரத்தார் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தான் கூறியது தவறாக சித்தரிக்கப்பட்டது என மன்னிப்பு தெரிவித்தார்.

 

உருக்கமான பேச்சு :

’இப்படிப்பட்ட மனிதரையா இவ்வளவு காலம் கிண்டலடித்து கொண்டிருந்தோம்’ என்று நினைக்கும் அளவிற்கு தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. மதுரை எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் சாலை பாதுகாப்பு விதிமுறை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய செல்லூர் ராஜு “மது போதையினால் பல்வேறு விபத்துகள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. அதன் மூலம் விலை மதிப்பற்ற உயிர் பறிபோகிறது. இதனால் அந்த குடும்பம், சுற்றத்தார் ஆகியோர் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது அந்த வலியை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அதற்கு நானே ஒரு உதாரணம். என் மகன் சாலை விபத்தில் இறந்து 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த நினைவுகள் எங்களை விட்டு விலகவில்லை. நானும் என் மனைவியும் இறக்கும் வரை அந்த நினைவுகள் இருக்கும்” என்று உருக்கமாக தெரிவித்தார். அவரது மகன் கடந்த 2012-ஆம் ஆண்டு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

 

உயர்ந்த மனிதர் :

செல்லூர் ராஜுவின் இந்த உருக்கமான பேச்சு அவர் மீதான அத்தனை விமர்சனங்களையும் பின்னுக்குத் தள்ளி அவருக்குள் இருந்த உண்மையான பாசத்தையும், மனிதாபிமானத்தையும் வெளியில் கொண்டு வந்து அவரை ஒரு உயர்ந்த மனிதராக மாற்றியுள்ளது. தனது மகனைப் போல மற்றவர்கள் யாரும் இறக்கக்கூடாது என்பதற்காக ஹெல்மெட் அணியாமல் யாரும் வாகனம் ஓட்டக்கூடாது என்று கூறும் செல்லூர் ராஜுவின் அறிவுரையை நாம் பின்பற்றுவதில் எந்த தவறும் இல்லை!!

News Counter: 
100
Loading...

Ramya