வீட்டுவசதி வாரிய குடியிருப்பிலிருந்து நல்லக்கண்ணு வெளியேற்றம் : பழ.நெடுமாறன் கண்டனம்

share on:
Classic

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தியாகராயநகரில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 12 ஆண்டுகளாக வசித்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் வீட்டை காலி செய்யும்படி அரசு அதிகாரிகள் உத்தரவிட்டதன் பேரில் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 94 வயதான தலைவரின் தியாகத்தை எண்ணிப் பார்க்காமல், அரசு குடியிருப்பில் இருந்து அவரை வெளியேற்றி இருப்பதை பழ.நெடுமாறன் கண்டித்துள்ளார். அதனால், முதலமைச்சர் பழனிசாமி இந்தப் பிரச்னையில் தலையிட்டு நல்லக்கண்ணுவுக்கு அரசு வீடு ஒன்றினை உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan