“மக்கள் நல்ல படங்களை கைவிடமாட்டார்கள் என்பது மீண்டும் நிரூபணம்” - இயக்குனர் ராம்

share on:
Classic

கற்றது தமிழ் முதலாகவே, தன் படங்களை விமர்சகர்களை விட மக்கள் நன்றாக புரிந்து கொள்கிறார்கள் என்று இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார்.

ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் சாதனா உள்ளிட்ட பலர் நடித்து அண்மையில் வெளியான பேரன்பு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படக்குழுவினருக்கு இயக்குனர் பா. ரஞ்சித்தின் கூகை திரைப்பட இயக்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் ராம், பா. ரஞ்சித், லெனின் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில பேசிய ராம், “பேரன்பு படத்தை ஒரு மாற்று சினிமாகவாக நான் எடுக்கவில்லை. அதனை ஒரு மெயின்ஸ்டிரீம் சினிமாகவாக தான் எடுத்தேன். நல்ல படங்களை மக்கள் கைவிட மாட்டார்கள் என்பது  மீண்டும் நிரூபணமாகி உள்ளது. கற்றது தமிழ் முதலாக விமர்சகர்கள் என் படங்களை புரிந்து கொண்டதை விட மக்கள நன்றாக புரிந்து கொள்கிறார்கள்” என்று கூறினார்.

திரைக்கு வருவதற்கு முன்பாகவே பேரன்பு படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்று பலரது பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ramya