பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்..பொதுமக்கள் பீதி..!

share on:
Classic

பப்புவா நியூ கினியாவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

பசிபிக் தீவுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவில் இன்று அதிகாலை திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. இது வரை எந்த உயிர் தேசமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பயங்கர நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. 

பப்புவா நியூகினாவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பையில் இருந்து 250 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 125 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

Ragavan