தமிழகத்தில் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..!

share on:
Classic

தமிழகத்தில் இன்று விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற்ற நிலையில், சில பகுதிகளில் பொதுமக்கள், தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், தனித் தீவு போன்று உள்ள அரியூர் கஸ்பா கிராமத்தில் வசித்துவரும் மலைவாழ் மக்கள் சுமார் 40 ஆண்டு காலம் தார் சாலை இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக குற்றம்சாட்டி தேர்தலை புறக்கணிப்பதாகத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதற்காக தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிவைத்தனர். அந்த ஊருக்கு செல்லும் மண் சாலையில் மழை காலங்களில் கடும் அவசதிக்கு ஆளாவதாக பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

பல்லடம் அருகே வெங்கிட்டாபுரத்தில் மின்மயானம் அமைக்கும் அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குச்சாவடிக்குச் செல்லாமல் தேர்தலைப்புறக்கணித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். குட்டையை ஆக்கிரமித்து மின்மயானம் கட்டினால் தங்களது நீராதாரம் பாதிக்கப்படும் என்றும் இதனால் கால்நடைகள், மனிதர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் கூறி அப்பகுதியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தநிலையில், இன்று, தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேல உப்பிலுகுண்டு பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக தங்கள் பகுதிக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துதரப்படவில்லை என தெரிவித்து பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்புப் பொராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அப்பகுதி மக்களிடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வாக்களிக்க அழைத்தனர்.அப்போது, பொதுமக்களுக்கம் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திருப்பூர் அருகே நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரித்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் சின்னப்புதூர் கிராமத்தில் உள்ள இரண்டரை ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ரங்கநாதன் என்பவர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

News Counter: 
100
Loading...

aravind