தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாமாண்டு நினைவு தினம் : மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி..!

share on:
Classic

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த ஆண்டு தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாமபாக உயிரிழந்தனர். இந்த கோர நிகழ்வின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள தோம்மையார் கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதால் மாநகர் முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

aravind