பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொடூரமாக கொலை..மக்கள் போராட்டம்..!

share on:
Classic

ஒடிஷா மாநிலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

குர்தா மாவட்டத்தில் உள்ள முண்டியாஷாஹி பகுதியில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். குற்றம் செய்த நபரை பொதுமக்கள் பிடித்து கடுமையாகத் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையை போலீசார் தாக்கியதாகக்கூறியும், குற்றவாளியை தண்டிக்கக்கோரியும், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது சாலைகளில் டயர் உள்ளிட்ட பொருட்களை தீயிட்டுக் கொளுத்தினர்.  பெருமளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind