குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் 

share on:
Classic

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 

ஆலங்காயம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளக்குட்டை நன்னேரி கிராமத்தில் கடந்த 5  மாதங்களுக்கு மேலாக குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத, கிராம நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவப் பகுதிக்கு வந்த அதிகாரிகளுடன் போராட்டக் காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

 

News Counter: 
100
Loading...

aravind