பட்டப்பகலில் நடைபெறும் மணல் கொள்ளை..அதிகாரிகளும் உடந்தையா..?

share on:
Classic

விராலிமலை அருகே பட்டப்பகலில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மீனவேலி, பெரிச்சிப்பட்டி, ஆணயன் தோப்பு உள்ளிட்ட ஆற்றுப்படுகைகளில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அரசு அனுமதியின்றி மணல் எடுத்து செல்வதற்கு வருவாய்த்துறை அதிகாரிகளும் போலிசாரும் உடந்தையாக இருப்பதாகவும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

அதுமட்டுமின்றி மீனவேலி, பெரிச்சிப்பட்டி பகுதிகள் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் இருப்பதால் மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

News Counter: 
100
Loading...

aravind