கொளுத்தும் கோடையை சமாளிக்க நீச்சல் குளங்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்..!

share on:
Classic

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பித்து எந்நேரமும் தண்ணீரில் குளித்துக் கொண்டே இருப்பது வார்த்தைகளில் வடிக்க முடியாத அலாதியான இன்பம் தான்..

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்தும் வரும் நிலையில் நகர்புற மக்கள் தங்கள் உடல் வெப்பத்தை தணிக்க நீச்சல் குளங்களில் தஞ்சம் அடைகின்றனர். மீனைப் போல் நீந்துவது யாருக்குத் தான் பிடிக்காது. குளிரான நீரில் இதமான சூழலில் நீச்சல் குளங்களில் தவம் கிடக்க சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

நடைப்பயிற்சி, ஓட்டப்பந்தயம், உடற்பயிற்சி போன்று நீச்சல் பயிற்சியும் உடலுக்கு எண்ணற்ற பலன்களை தருகின்றன. உடல் பருமனை விரட்டி மனிதர்களை ஆரோக்கியமாக வாழச் செய்ய நீச்சல் உதவுகிறது. சோர்வில் இருந்து உடல் உறுப்புகள் அனைத்தையும் சுறுசுறுப்பாக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் இதயம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை நலத்துடன் வாழச் செய்கிறது. மன அழுத்தம், கவலை உள்ளிட்ட மனப்பிரச்சனைகளுக்கும் நீச்சல் தீர்வு தருகிறது.

 

ஆபத்து காலங்களில் மிகச்சிறந்த தற்காப்புக் கலையாக திகழும் நீச்சலை முறையான பயிற்சியாளர்களிடம் இருந்து கற்றுக் கொள்வது அவசியம். ஆழம் குறைந்த இடங்களில் நீச்சலடிக்க தொடங்கலாம்.முழுமையாக பயிற்சி பெறாதவர்கள் ஆழமான இடங்களில் ஆபத்தை உணராமல் நீச்சல் பழகுவதைத் தவிர்ப்பது நல்லது. நீச்சல் குளங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதாக என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 

 

வெற்று பொழுதுபோக்காக மட்டும் கருதாமல் உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்சியைத் தரும் நீச்சல் பயிற்சியை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவோம்..

 

News Counter: 
100
Loading...

aravind