கூடுதல் பேருந்துகளுக்காக போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்!!!

share on:
Classic

இரவு நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கக்கோரி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 சென்னை புறநகர் பகுதிகளுக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் பொன்னேரி திரும்புவதற்கு குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்படுவதால், பயணிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி, பொன்னேரி பேருந்து நிலையத்தில் பயணிகள்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர், போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி, இரவு நேரத்தில் கூடுதலாக பேருந்து இயக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு, பயணிகள் கலைந்து சென்றனர்.

News Counter: 
100
Loading...

aravind