வால்பாறையில் தொடர் மழை..மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

share on:
Classic

வால்பாறையில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர்ந்து ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரு நாளில் அதிகபட்சமாக சின்னகல்லாரில் 226 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதன் காரனமாக வால்பாறை வாழைத்தோட்டம், டோபி காலணி பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் அரசு போக்குவரத்து கழக பணிமணையில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் பராமரிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

தேயிலை தோட்ட பகுதி சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரனமாக போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளதால், இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind