வால்பாறையில் தொடரும் கனமழை, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

share on:
Classic

வால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வாழைத்தோட்டம் மற்றும் புதுத்தோட்டம் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வாழைத்தோட்டம், டோபி காலணி, காமராஜ் நகர் சிறுவர் பூங்கா பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. கனமழையால் புதிதாக கட்டப்பட்ட அரசு போக்குவரத்து கழக பணிமனையின் சுற்றுச்சுவர் இடிந்ததால், பணிமனையை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், டீசல் நிரப்ப முடியாததால் பேருந்துகள் சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில், ஏரளமான தேயிலைத் தோட்டங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதாலும், கடும் குளிர் நிலவுவதாலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில், வால்பாறை நகரில் 165 மில்லி மீட்டர், சின்னகல்லாரில் 200 மில்லி மீட்டர், நீரார் அணையில் 200 மில்லி மீட்டர். சோலையார் அணையில் 210 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 89 பேர், தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, உடைகள் மற்றும் மருத்துவ வசதி குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

News Counter: 
100
Loading...

Ragavan