கிணற்றின் விளிம்பில் நின்று ஆபத்தான முறையில் குடிநீர் பிடிக்கும் மக்கள்..!

share on:
Classic

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிணற்றின் விளிம்பில் நின்று ஆபத்தான முறையில் கிராமமக்கள் குடிநீர் பிடித்து வருகின்றனர்.

ஓசூர் அருகே டேம்எப்ளம் கிராமத்தில் மின்மோட்டார் பழுதானதால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் அருகேயுள்ள விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். கடும் குடிநீர் பஞ்சத்தை போக்க வழியில்லாததால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிணற்றின் விளிம்பு பகுதியில் ஆபத்தான முறையில் நின்று தண்ணீர் பிடிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கரணம் தப்பினால் மரணம் என்ற இந்த நிலையை மாற்ற பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்து, மீண்டும் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

News Counter: 
100
Loading...

Ragavan