ஜனநாயகத்தை காக்க மக்கள் வாக்களிப்பார்கள் : வாக்களித்த பின் மு.க ஸ்டாலின் பேட்டி..

share on:
Classic

ஜனநாயகத்தை காக்க மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க திமுக தலைவர் மு.க ஸ்டாலினுடன் தனது மனைவியுடன் வந்தார். பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார் ஸ்டாலின். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ ஆட்சி மாற்றத்தை உருவாக்க உங்கள் வாக்கு அமைந்திட வேண்டும். எனவே ஒவ்வொருவரும் தவறாமல் உங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். முக்கியமான தேர்தலாக இது அமையப்போகிறது. காரணம் வாக்குகளுக்காக அதிகளவில் பணம் விநியோகிப்பட்டுள்ளது. அதையெல்லாம் மீறி ஜனநாயகத்தை காக்க மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பழுதாகி உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிசெய்ய தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார். 
 

News Counter: 
100
Loading...

Ramya