விவசாயிகளுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றது பெப்சிகோ..!

share on:
Classic

லேஸ் சிப்ஸ் உருளை கிழங்கு உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் பெப்சிகோ நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது.

லேஸ் எனப்படும் சிறுவர் சிறுமிகள் விரும்பி சாப்பிடும் உருளை கிழங்கு சிப்ஸ்கள் தயாரிப்பதற்காக பெப்சி இந்தியா நிறுவனம் எப்சி-5 ரக உருளை கிழங்குகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில், குஜராத்தில் விவசாயிகள் சிலர் இந்த ரக உருளை கிழங்குகளை பயிரிட்டு உள்ளனர்.  இதற்கு இந்நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.   கடந்த ஏப்ரலில் 11 விவசாயிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.  

இந்த விவகாரம், சட்ட எல்லையில் இருந்து நகர்ந்து, அரசின் நடவடிக்கை என்ற பிரதேசதக்குக்கு மாறியது. இதையடுத்து, அகமதாபாத் நீதிமன்றத்தில் 4 விவசாயிகளுக்கு எதிரான வழக்குகள், மொதாசா நீதிமன்றத்தில் 5 விவசாயிகள் மீதான வழக்குள் மற்றும் பெரு விவசாயிகள், வர்த்தகர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் பெப்சிகோ நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது.

 

News Counter: 
100
Loading...

Ragavan