பெரம்பலூர் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் பிரம்மாண்ட கார்த்திகை தீபம்

share on:
பெரம்பலூர், பிரம்மரிஷி மலை, கார்த்திகை தீபம்
Classic

பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில்  நாளை  கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுவதையொட்டி 1008 மீட்டர் நீளமுள்ள திரி, 1008 கிலோ பசு நெய், 100 கிலோ கற்பூரம் கொண்டு பிரமாண்டமான மகாதீபம் ஏற்றபடுவதற்கான பணிகள் நடைப்பெற்றது.

பெரம்பலூர் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும் எளம்பலூர் பிரம்மரிஷிமலையில் தீப திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி 36-வது ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நாளை  கொண்டாப்பட உள்ளது. 

இதனை முன்னிட்டு நான் நாளை திரு கார்திகை தீபத்தன்று தீபம் ஏற்றுவதற்காக 1008 மீட்டர் நீளமுள்ள திரி,1008 கிலோ பசு நெய், மரச்செக்கினால் தயார் செய்த நல்லெண்ணைய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பெண்ணைய், புங்கை எண்ணை ஆகிய 100 டின் கொண்டு மலையின் மீது 6 அடி உயரத்தில் பெரிய செம்பு கொப்பையில் 100 கிலோ கற்பூரம் கொண்டு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.

இதற்கான, தீப திரி மற்றும் நெய், கற்பூரம், கொப்பறை ஆகியவை சேகரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.கார்த்திகை தீபத்தன்று பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து காலை 6 மணிக்கு கோ பூஜை மற்றும் அஸ்வபூஜையும், 210 சித்தர்கள் யாகமும், அஸ்வினி  ஊர்வலம், தீப செப்பு கொப்பறை, திரி, நெய் ஆகியவற்றுடன் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, 63 மேள தாள இசை முழுங்க எளம்பலூர் பிரம்மரிஷி மலைக்கு ஊர்வலமாக தீப பொருள்கள் கொண்டு வரப்படுகிறது. 

பின்னர் மாலை 6 மணிக்கு வாண வேடிக்கையுடன், மலை மீது அருட்பெருஞ்ஜோதி மகாதீபம் ஏற்றப்படும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை மகா சித்தர்கள் டிரஸ்ட் நிறுவனர் இராஜ்குமார் சுவாமிகள்,ரோகினி மாதாஜி மற்றும் மெய்யன்பர்கள் செய்து வருகின்றனர்.

இவன் மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போக்சோ சட்டம் முழுவடிவம் பெற்றுள்ளதை அடுத்து,  இவனுக்கு உச்சபட்ச தண்டனை விதிக்கப்படும் என்ற  எதிர்பார்ப்பும் வலுத்துள்ளது.
 

News Counter: 
100
Loading...

vijay